அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழா பதிவு விவரம்
ATA Virtual Convention Registration
ATA Convention 2022 - Finalist
அமெரிக்க தமிழ் கல்விக் கழகத்தின்(அ.த.க.) ஆண்டு விழா போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளி மாணாக்கர்களுக்கும், அவர்களை ஊக்குவித்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் அனைவருக்கும் அன்னை தமிழ் கல்விக்கழகத்தின் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மொத்தமாக பங்கேற்ற 24 போட்டியாளர்களின் திறன்களை நடுவர்கள் தீர ஆய்ந்து, அறிவிக்கப்பட்டிருந்த ஒவ்வொரு பிரிவிலும் இருந்து 2 குழந்தைகள் என மொத்தமாக 11 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அ.த.க.வின் போட்டிக்கு அனுப்பி வைத்தோம். அதிலிருந்து 3 மாணாக்கர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு அன்னை தமிழ் கல்விக்கழகத்தின் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் !!
அபிராமி கல்யாணசுந்தரம் Nilai - 3A பேச்சுப் போட்டி - பிரிவு 1
ஆதிரை சுரேஷ் கவுண்டர் Nilai - 4B பேச்சுப் போட்டி - பிரிவு 1
நிகிலன் ரத்தினகுமார் Nilai - 6 பேச்சுப் போட்டி - பிரிவு 2
இந்த மூன்று மாணாக்கர்கள் எதிர்வரும் டிசம்பர் 10 - 11 தேதிகளில் நடைபெற இருக்கும் மெய்நிகர் ஆண்டுவிழாவில் தங்களது திறனை மீண்டும் வெளிப்படுத்துதல் வேண்டும். அதனை அ.த.க.வின் நடுவர்கள் மெய்நிகர் வழியாகக் கண்டு அதனிலிருந்து ஒவ்வொரு பிரிவிற்கும் வரிசையின்படி முதல் ஐந்து இடம் பெறுபவர்களை தேர்ந்தெடுத்துத் தர இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் முன்னர் குறிப்பிட்டிருந்தது போல உரிய பணமுடிப்புப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட இருக்கின்றன.
போட்டியில் பங்கேற்று இறுதி வரை செல்ல முடியாதவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். தற்பொழுது வெற்றியிடங்களைத் தவறவிட்டு இருப்பினும், எதிர்காலத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று மேலும் தமது திறன்களை வெளிக்கொணர்ந்து முதன்மை இடங்கள் பெற்று வெற்றியாளர்களாகத் திகழ வேண்டி விரும்புகிறோம்.
அ.த.க.வின் மெய்நிகர் ஆண்டுவிழாவில், தமிழ்ப் பேராளர்கள், கல்வியாளர்கள், மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களது இறுதிப்போட்டிகள், ஆசிரியர் விருதுகள், விழா மலர் வெளியீடு என பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற இருக்கின்றன. அனைத்து நிகழ்வுகளையும் இணையவழியில் காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
மெய்நிகர் விழா விவரம் (Facebook Live Link & Zoom) விரைவில் அனுப்பிவைக்கப்படும். உங்கள் நாட்காட்டியில் டிசம்பர் 10-11 குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி,
ATA Convention 2022
வணக்கம்!!
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் (அ.த.க.) 2022-23-க்கான ஆண்டு விழா எதிர்வரும் டிசம்பர் 10(சனி) மற்றும் 11(ஞாயிறு) தேதிகளில் மெய்நிகர்(Virtual) விழாவாக நடத்த அ.த.க. திட்டமிட்டுள்ளது. இவ்விழாவில் மாணவர்களுக்காக மாறுவேட போட்டி, சுட்டிகளின் குட்டிக் கதை, செய்யுள் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி என தமிழ்க் கல்வி சார்ந்த திறன் அறிதல் போட்டிகள் இடம்பெறுவதுடன், ஆசிரியப் பெருமக்களுக்கான பேச்சுப் போட்டி, மற்றும் கவிதைப் போட்டிகள் சிலவும் இடம்பெற இருக்கின்றன.
பெற்றோர்கள் உங்களின் குழந்தைகளை இப் போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்கமளித்து, குழந்தைகளின் விருப்பத்தை பதிவு செய்ய இங்கே உள்ள பதிவு படிவத்தை (Click Here) அக்டோபர் 30 ஆம் தேதிக்குள், பூர்த்தி செய்து "அன்னை தமிழ் அகாடமிக்கு" அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் குழந்தைகளை இப்போட்டிக்கு தயார் செய்யவும் வேண்டுகிறோம்.
போட்டியின் விவரங்கள் மற்றும் விதிமுறைகள் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்கள் அறிய ஆசிரியை ரேவதி / நித்யா அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
Entry to Competition
Contestants should submit the Registration Form on or before October 30, 2022.
Refer to the PDF file attached (ATA Virtual Convention 2022-Details.pdf) for the Competition details, Category, Rules and the Selection process.
As it is a Virtual convention, the video recordings for Fancy Dress, Pechu Potti, Seiyul Potti and Kavithai competition should be shared to us on or before Nov 13,2022.
Google drive location will be shared to upload the files, after the close of Registration.
General Rules
Contestants cannot compete in more than 2 competitions.
Contestants are not allowed to refer to any material during the recordings.
Two finalists will be selected from each Competition and Category to represent "Annai Tamil Academy". Selection process will be by the 3rd party Judges.
All finalists should be available for the Virtual convention on December 10 and 11, 2022 to present/showcase the skill via Zoom.
Cash prizes will be awarded to Winners. (1st - $200, 2nd - $150, 3rd - $100, 4th & 5th prize - $75 each)
Certificates will be provided to all participants. Last year's certificates can be seen in the website
Questions? Email to Contact@AnnaiTamilAcademy.org