அன்னைத் தமிழ்க் கல்விக்கழகம்
ஆண்டுவிழா அழைப்பிதழ்
Website Updated On : 03/15 - Coming Soon அன்னை உதவியாளர் Chatbot
ஆண்டுவிழா அழைப்பிதழ்
ஆண்டுவிழா 2025 - 2026
Important Dates :
Annual Day : Mar 22, 2026
Registration Close: Jan 31, 2026
Annai Tamil Academy - School Annual Day 2026 - Invitation
வணக்கம்!!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!
புதிய ஆண்டை வரவேற்கும் இந்த நேரத்தில், வரவிருக்கும் அன்னைத் தமிழ்க் கல்விக்கழகத்தின் ஆண்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம், இந்த முன் அறிவிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
இவ்விழாவில் மாணவர்களுக்காக மாறுவேடம், இசை, நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள், அகப்பெல்லா, மற்றும் பல சிறப்பான நிகழ்ச்சிகளைத் நமது ஆசிரியர்கள் தயாரித்து வருகின்றனர்.
இது நமது மாணவர்கள் மேடையில் தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ள, தங்கள் திறமைகளை பெருமையுடன் வெளிப்படுத்த, ஒரு சிறந்த வாய்ப்பு. நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பதிவு (Registration Form) அடுத்த 2 வாரங்களில் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
வாருங்கள், கலந்து கொண்டு விழாவின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்!
தேதி: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
நேரம்: காலை 11:00 – மாலை 4:00 CST
இடம்: Benedictine University, 5700 College Road, Lisle, IL - 60532
நுழைவு: அனைவருக்கும் இலவசம் (முன்னாள் ATA குடும்பங்கள் உட்பட).
மதிய உணவு: அனைத்து வருகையாளர்களுக்கும் இலவசம்.
பங்கேற்பு: வகுப்பு ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்க ஊக்குவிக்கவும்.
பதிவு படிவம் : Annual Day Registration Form
பதிவு செய்ய கடைசி தேதி : 01/31/2026 அல்லது 400 பேர் எட்டுதல்
தயவுசெய்து கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்யவும். திட்டமிடல் காரணங்களுக்காக, 01/31/2026 க்குள் பதிவை முடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பங்கேற்பாளர் எண்ணிக்கை 400-யை எட்டியவுடன், பதிவு நிறுத்தப்படும்.
நீங்கள் மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள முடியாவிட்டால், பதிவு செய்ய தேவையில்லை.
விழாவின் வெற்றி நமது அனைவரின் கூட்டு முயற்சியில்தான் உள்ளது. எனவே, பெற்றோர்கள் நமது ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றி, நிகழ்ச்சியை முன்னெடுத்து செல்ல உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுக்கு நிகழ்ச்சி நடத்தும் அனுபவமோ, தகவல்கள் இருந்தால், ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். விருப்பமுள்ளவர்கள் இணைப்பில் பதிவு செய்து கொண்டு, ஆசிரியர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவும்.
உங்கள் ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
நிகழ்ச்சிகளை விவரங்கள் மின்னஞ்சலில் அடுத்த 2 வாரங்களில் அனுப்பப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் அறிய ஆசிரியை நித்யா (336-918-4378) அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
Annai Tamil Academy - IL
Program Committee
நிகழ்ச்சி விவரங்கள்
🧒 பங்கேற்பு வரம்பு: ஒவ்வொரு மாணவரும் அதிகபட்சம் இரண்டு (2) நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.
🎭 நிகழ்ச்சி விருப்பங்கள்: மாணவர்கள் தங்களின் நிலைகளுக்காக (கீழே உள்ள) திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். அதே நேரத்தில், பொது நிகழ்ச்சியான நடனம், இசை நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்க முடியும்.
💃 மாணவர் நடன நிகழ்ச்சி : நடன நிகழ்ச்சிக்கு பதிவு செய்பவர்களை, நிகழ்ச்சி குழு தொடர்புகொள்ளும்.
👨👩👧 பெற்றோர் நடன நிகழ்ச்சி: இந்த ஆண்டில் பெற்றோருக்காக சிறப்பு குழு நடன நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
முன்-மழலை - மாறுவேடம் (பழங்களாகவும் காய்கறிகளாகவும் மேடையில் தோன்றி உணவின் அவசியத்தை எடுத்துரைக்கும் ஒரு நிகழ்வு)
மழலை - பாடல் பவனி (பாடத்தில் உள்ள 2 பாடல்களை மாணவர்கள் நடிப்புடன் கலந்து பாடவுள்ளனர்)
நிலை-1 - கண்டுபிடி கண்டுபிடி (திரையில் தோன்றும் படங்களில் உள்ள சொற்களை மாணவர்கள் குழுக்களாக பிரிந்து கண்டுபிடித்தல்)
நிலை-2 - Zha (ழ) Factor (மாணவர்கள் உரையாடல் பாணியில் குறும்பட நாடகத்தை நிகழ்த்துவார்கள். ஆசிரியர்கள் கதைகளைத் தயாரித்து, பங்கேற்பாளர்களுக்கு பாத்திரங்களை ஒதுக்குவார்கள். குழந்தைகள் பயிற்சி செய்து, மேடையில் நடிக்கும் அனுபவம்)
நிலை-3 - தமிழுக்கு அமுதென்று பேர் (குழு இசை மற்றும் பாடல் நிகழ்ச்சி)
நிலை-4 - மிளிரும் முத்துக்கள் (வியப்பிற்குரிய செயல்களை செய்து, சாதனைகள் படைத்த தமிழர்களை கௌரவிக்கும் ஒரு மரியாதை அணிவகுப்பு)
நிலை-5 - துரித உணவும் உடல் நலமும் (நாடகம். ஆசிரியர்கள் கதைகளைத் தயாரித்து, பங்கேற்பாளர்களுக்கு பாத்திரங்களை ஒதுக்குவார்கள். குழந்தைகள் பயிற்சி செய்து, மேடையில் நடிக்கும் அனுபவம்)
நிலை-6 - பாட்டு பாடவா (இசை இன்றி, குழுவாக இணைந்து பாடுவதன் மூலம் அவர்களின் நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் படைப்பாற்றல் வளர்க்கும் நிகழ்ச்சி)
நிலை-7 & 8 - நாடகம் (இவ்விரண்டு நிலைகளின் மாணவர்கள் இணைந்து நடிக்கும் ஒரு சிறு நாடகம். கதாபாத்திரங்களும் உரையாடல்களும் ஆசிரியர்களால் வழங்கப்படும்)